செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட எளிமையான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
முதலில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது ஜூஸ். நம் உடலில் திரவப் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது எளிதில் ஜீரணம் ஆகும்.
இது செரிமான பிரச்சனையில் இருந்து நம்மை காக்கும்.
இரண்டாவதாக நார்ச்சத்து உள்ள பொருட்களை அதிகமாக நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உலர் பழங்கள் பருப்பு வகைகள் மற்றும் கோதுமை போன்ற உணவுகளை நாம் உண்ணும் போது செரிமானப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
செரிமான பிரச்சனைக்கு முக்கியமான காரணம் உடல் ஆரோக்கியம். உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதனால் செரிமான பிரச்சனை வரக்கூடும். அதற்காக உணவு கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும், நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
செரிமான பிரச்சனைக்கு உடல் சுறுசுறுப்பு மிகவும் முக்கியம்.
கூடுமான அளவு ஜிம்மிற்கு சென்று உடல் சுறுசுறுப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும்.
இறுதியாக நம் உணவில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள இறைச்சி வகைகளை பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் கொழுப்பு சத்து நிறைந்த உணவு விரைவில் ஜீரண சக்தி ஆகாது.