Chasing Movie Review
உயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் கும்பலைப் பற்றி உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, அவர்களை கைது செய்யும் பொறுப்பை வரலட்சுமி ஏற்கிறார்.
தனக்கென நம்பிக்கையான போலீஸ் டீம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு, அதற்கான வேட்டையை தொடங்குகிறார். இளம் பெண்களை போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யும் வில்லன். போதை மருந்து கடத்தி விற்கும் கூட்டம் என ஒவ்வொன்றையும் அழிக்கும் வேலையில் இறங்குகிறார் வரலட்சுமி.
இந்நிலையில் வரலட்சுமியின் டீமை கடத்துகிறது போதை மருந்து கூட்டம். அவர்களை வரலட்சுமி காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் துணிச்சலாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இணையாக படம் முழுவதும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சூப்பர் சுப்பராயன், மலேசிய வில்லன் ஜெரால்டு, சோனா உள்பட படம் முழுக்க ஏராளமான வில்லன்கள் வந்து போகின்றனர். பால சரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
இயக்குனர் வீரக்குமார், புதுமுக இயக்குனரான இவர், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்களை திறம்பட கையாண்டுள்ளார். படத்திற்கு சேஸிங் என பெயர் வைத்ததாலேயோ என்னவோ, ஏராளமான சேஸிங் காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார். சில இடங்களில் அது பின்னடைவாக அமைந்துள்ளது. திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் சேஸிங் விறுவிறுப்பாகி இருக்கும்.
படத்தின் 2ம் பாகம் முழுவதும் மலேசியாவில் படமாக்கி உள்ளனர். ஈ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு மலேசியாவின் எழிலை அள்ளி வந்திருக்கிறது. தஷியின் பின்னணி இசை காட்சிகளை வேகப்படுத்தி இருப்பதுடன் படத்திற்கும் பலமாக அமைந்துள்ளது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…