வலிமை படத்தின் விமர்சனத்தால் பீஸ்ட் படக்குழு செய்த பெரிய மாற்றம்… உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

மேலும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பீஸ்ட் படத்தின் ரன்னிங் டைம் வலிமை படத்தைப் போல இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் தான் இருந்துள்ளது.

வலிமை படம் ரிலீசான பிறகு இந்த படத்தை பார்க்க நிறைய பொறுமை வேண்டும் என தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் ரன்னிங் டைமை குறித்து வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பீஸ்ட் படக்குழு அதனைக் கருத்தில் கொண்டு ரன்னிங் டைமை குறைத்து இறுதியில் இரண்டு மணிநேரம் 35 நிமிடங்கள் ஆக மாற்றியுள்ளது.

இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்தின் ரன்னிங் டைமை குறைத்ததே இந்த படத்தின் பாதி வெற்றி என கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Changes in Beast Movie Running Time
jothika lakshu

Recent Posts

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

7 hours ago

Modha Rathri Title Song Video

Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…

7 hours ago

Mudhala Mudiva Video Song

Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…

7 hours ago

47 வயதில் முதல் ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்திய நடிகை ஜோதிகா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…

17 hours ago

“ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வேதனை

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…

17 hours ago

“இந்தக் காலத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடியவில்லை!” – ராதிகா சரத்குமார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

18 hours ago