chaithra-reddy-about-ajith-61 movie
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அஜித் 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக அஜித் பைக்கில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அஜித் இல்லாமல் தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது அஜித் 61 படத்தில் நடிப்பதாக அவருடைய பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக செல்கிறேன் என விமான நிலையத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் அது அஜித் 61 படத்தின் சூட்டிங்கிற்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாது. சன் நட்சத்திர கொண்டாட்டத்திற்காக திருச்சி சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது அவருடைய இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிய வந்துள்ளது.
இந்த புகைப்படத்தை தான் சைத்ரா ரெட்டி பெயரில் இயங்கி வரும் போலி கணக்கில் அஜித் 61 ஷூட்டிங்கிற்கு செல்வதாக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…