celebrities-pay-tribute-at-vijayakanth-memorial
“நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அவரது நினைவிடத்தில் திரைப்பிரபலங்களான ஆதி, நிக்கி கல்ராணி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீநாத், எஸ்.ஏ.சந்திரசேகர், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், \”விஜயகாந்த் சார் சினிமாத் துறையின் மிகப்பெரிய இழப்பு. நான் குறும்படம் செய்து கொண்டிருக்கும் காலங்களில் கேப்டன் தொலைக்காட்சிக்கு ஒரு குறும்படம் அனுப்பி வைத்தேன். அப்போது தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கண்டிப்பாக நீ படம் பண்ணிவிடுவாய் என்று கூறினார். அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய ஊக்கமாக இருந்தது\” என்று பேசினார்.”,
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…