Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு வருடத்தை கடந்த அரபிக் குத்து. படகுழு வெளியிட்ட வீடியோ

celebrating-1-year-of-arabic-kuthu

கோலிவுடில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து இணையதளத்தை அதிர விட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் ஒரு வருடத்தை கடந்திருப்பதை படக்குழு ஸ்பெஷல் வீடியோவாக வெளியிட்டு கொண்டாடி வருகிறது.

அதாவது பீஸ்ட் திரைப்படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி விஜய் நடனம் ஆடி மாஸ் ஹிட் அடித்த அரபிக் குத்து பாடல் வெளியாகி இன்றுடன் ஒரு வருடத்தை கடந்துள்ளது. இதனை ஸ்பெஷல் கிளிம்ஸ் வீடியோவாக பகிர்ந்து படக்குழு கொண்டாடி வருகிறது.