சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இதனிடையே, இயக்குனர் சங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் ஆனார்.

இதனால் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் ‘இந்தியன் 2’ பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Suresh

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

11 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

14 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

14 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

14 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

15 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

15 hours ago