தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் ரூ.70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த வித்ஜா என்ற பெண் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.