கூந்தல் வளர கருவேப்பிலை எவ்வாறு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
நாம் அன்றாட ம் உண்ணும் உணவுகளில் சாப்பிடும் பொருள்களில் ஒன்று கருவேப்பிலை. ஆனால் சிலர் கருவேப்பிலையை சாப்பிடுவதில்லை. கருவேப்பிலையில் பல நன்மைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. மலிவாக கிடைக்கும் கருவேப்பிலையில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.
கருவேப்பிலை அதிகமாக சாப்பிட்டால் தலைவலி இதய நோய் தடுக்கவும் சருமம் மற்றும் கூந்தலின் அழகை மேம்படுத்தவும் கருவேப்பிலை மருந்தாக இருக்கிறது. பல முடி பிரச்சனைகளை நீக்கி முடி வளர உதவுகிறது.
கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலையை நன்றாக சூடாக்கி ஆறவைத்து பிறகு தேவைப்படும்போது எல்லாம் தலையில் தேய்த்து வர வேண்டும். இது தலை முடிக்கு புத்து உயர்தர உதவுகிறது. மேலும் இந்த எண்ணெய் முடிகளின் வேர்கள் உறுதியாகி வலிமையான முடி வளர உதவுகிறது.
முடி நீளமாக வளர கருவேப்பிலை சாறு மற்றும் வெங்காயச் சாறு சேர்த்து இரண்டையும் கலந்து முடியில் தடவி வர வேண்டும். இப்படி தடவி வந்தால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
முடி பளபளப்பாக இருக்க கருவேப்பிலையை அரைத்து அதில் முட்டை சேர்த்து கலந்து 40 நிமிடம் தலைமுடியில் ஊறவைத்து ஷாம்பு செய்ய வேண்டும். இது கூந்தலுக்கு புத்துயிர் அளித்து பளபளப்பாக இருக்க உதவும்.
தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனைக்கு கருவேப்பிலை மற்றும் தைரை சேர்த்து தடவி வரவேண்டும். இது அரிப்பு பிரச்சனையும் நீக்கும்.