தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.
மேலும் இவர் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில வருடங்களாக உடல்நல குறைபாடு காரணமாக அரசியலில் பெரிய அளவில் நாட்டம் இல்லாமல் இருந்து வரும் விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது தொண்டர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.