Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கேப்டன் விஜயகாந்த்தா இது.? ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்த புகைப்படம்

Captain Vijayakant in Latest Viral Photo

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பயணத்தை தொடங்கி அரசியலில் கோலோச்சியவர் கேப்டன் விஜயகாந்த். அளவுக்கதிகமான குடிபோதையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது அரசியலில் பெரிய அளவில் ஈடுபட முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவியும் அவரது உறவினர்களுமே அரசியலில் தேமுதிகவை வழி நடத்தி வருகின்றனர். ஆரம்பம் முதலே விஜயகாந்த் என்றால் உடல் எடையுடன் இருந்த முகம் தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும்.

அப்படியான விஜயகாந்த் தற்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக நெளிந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கேப்டன் விஜயகாந்தா இது என கேள்வி எழுப்பும் வகையில் அவர் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்