captain-miller-teaser-announcement
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்ததை தொடர்ந்து தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டீசர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஃபயர் இமோஜை கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc
Othaiyadi Lyric Video , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn ,a…
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI