கோலிவுட் திரையுலகில் பன்முகத் திறமைகளுடன் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. பிரியங்கா அருள் மோகன், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது. வசனமே இல்லாமல் வெறும் துப்பாக்கி மற்றும் குண்டுகள் சத்தத்துடன் மிரட்டலாக வெளியாகி இருந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வெளியான 24 மணி நேரத்தில் 23.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கோலிவுட்டின் 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற புதிய சாதனையை படைத்திருந்தது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக டீசருடன் படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது நான்கு மாதத்திற்கு முன்பே படத்திற்கான பிரமோஷனை படக்குழு ஆரம்பித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்ட பேனரின் வீடியோவை பதிவிட்டு இருந்த படகுழு தற்போது சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களின் வீடியோவை பதிவிட்டுள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் ஃபயர் இமோஜை கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
Witness the huge #CaptainMiller Hoardings & Bill Boards across Chennai City ????
Watch the #CaptainMillerTeaser here: https://t.co/NvxXHcTRDN pic.twitter.com/N5U2fDAcYO
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 3, 2023