Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் திரை விமர்சனம்

captain-miller movie review

ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தை சேர்ந்த நாயகன் தனுஷ், ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக ராஜாக்களும், இவர்களுக்கு அடிமையாக மக்களும் இருப்பதை விரும்பாமல், பட்டாளத்தில் சேர்கிறார். சிப்பாயாக இருக்கும் தனுஷ், சுதந்திர போராட்டகாரர்களை ஆங்கிலேயர்களின் கட்டாயத்தின் பெயரில் சுடுகிறார். பின்னர் மனவேதனை பட்டு சுட சொன்னவரை கொலை செய்துவிட்டு கொள்ளை கூட்டத்தில் சேர்கிறார் தனுஷ்.இவரை பிடிக்க ஆங்கிலேயர்கள் தேடுகிறார்கள். இந்நிலையில், ஊர் கோயிலில் பழைமையான பொக்கிஷத்தை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றுவிடுகிறார்கள். இதை அவர்களிடம் இருந்து திருட ராஜா ஜெயபிரகாஷ் தனுஷை நாடுகிறார்.பொக்கிஷத்தை திருடிய தனுஷ், அதை ராஜாவிடம் கொடுக்காமல் ஊரை விட்டு ஓடுகிறார்.

இதனால் கோபமடையும் ஆங்கிலேயர்கள் ஊர் மக்களை சித்ரவதை செய்து கொல்கிறார்கள்.இறுதியில் ஊர் மக்களை தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், தான் அசுர நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். மக்களுக்காக ஏங்குவது, மனம் வருந்துவது, போராடுவது என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக சுதந்திர போராட்டகாரர்கள் சுடப்பட்ட பிறகு வருந்தும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கிறார்.தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ் குமார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். கிளைமாக்ஸில் மாஸ் காண்பித்து இருக்கிறார். பிரியங்கா அருள் மோகன் டாக்டராகவும், பிற்பாதியில் தனுஷுக்கு உதவுபவராகவும் நடித்து மனதில் பதிகிறார். நிவேதிதா சதீஷ் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். குமரவேல் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.இயக்கம்ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வியலில் இருந்து தொடங்கி ஆக்ஷன் படமாக முடித்து இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியை மாஸாக இயக்கி இருக்கிறார்.இசைபடத்திற்கு பெரிய பலம் ஜிவி பிரகாஷ் இசை. படம் முழுக்க வித்தியாசமான பின்னணி இசை ரசிக்க வைத்திருக்கிறார்.ஒளிப்பதிவுபழைய காலத்திற்கு ஏற்ப காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா.படத்தொகுப்புநாகூரன் படத்தொகுப்பு அருமை.காஸ்டியூம்பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஸ்ரீராம் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.புரொடக்‌ஷன்சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

captain-miller movie review
captain-miller movie review