கேப்டன் மில்லர் படத்தில் அமெரிக்க நடிகர். புகைப்படத்துடன் படக் குழு அப்டேட்

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், கன்னட நடிகர் சிவராஜ்குமார் என பல உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் இடையே அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் மேலும் இப்படத்தில் இணைந்திருக்கும் புதிய பிரபலம் குறித்த அறிவிப்பை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இப்படத்தில், தெலுங்கில் பல விருதுகளை குவித்த RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான பிரபல அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் இணைந்திருப்பதாக படக்குழு போஸ்டருடன் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அதிக எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

10 hours ago

Vel Sevvel Lyrical Video

Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…

10 hours ago

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவில் மின்னிய ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…

17 hours ago

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பாகம் 3’ பணிகள் விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…

17 hours ago

‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் மிரட்டல் தோற்றம் வெளியீடு!

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…

17 hours ago

“அமீர் கானால் கூட முடியாது!” – ‘ட்ரெய்ன்’ பட விழாவில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…

17 hours ago