Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விறுவிறுப்பாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் படம்.!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

captain miller movie making update

தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் வரவேற்பை தொடர்ந்து தனுஷ் தற்போது சாணிக் காயிதம், ராக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வரலாற்று பாணியில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், இதில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவிலான காட்சிகளை விறுவிறுப்பாக உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை எகிர வைத்து வருகிறது.

captain miller movie making update
captain miller movie making update