கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து பன்முகத் திறமைகளுடன் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் நிலையில் இப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 25ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்ததால் அதனை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 30-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவலை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வைரலாக்கி வருகின்றனர்.
The most awaited #CaptainMiller First Look on JUNE 30 , 2023 ????????@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @dhilipaction @siddnunidop pic.twitter.com/XXPvoA2ku1
— Sathya Jyothi Films (@SathyaJyothi) June 27, 2023