கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன பயன் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ராலால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இது பல நோய்களையும் உண்டாக்கி விடுகிறது. அப்படி கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்களுக்கு வேர்க்கடலை ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருக்கிறது. பாதாமை விட அதிக சத்து வேர்க்கடலையில் இருக்கிறது. இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதய நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் வேர்க்கடலை உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடலாம் ஏனெனில் இது சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிறைவாகவே இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இது நம் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி பல நன்மைகளை நம் உடலுக்கு செய்கிறது. எனவே ஆரோக்கியம் நிறைந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழலாம்