தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.
300 கோடிக்கு விற்பனையான வலிமையை விழுங்கும் பீஸ்ட்.. வியாபாரம் குறித்து வெளியான தகவல்
படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 300 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் திரைப்பயணத்தில் இதுதான் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆன முதல் திரைப்படம்.
இது ஒருபுறமிருக்க இந்த 300 கோடிக்கும் அதிகமாக விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் விற்பனையாகும் என தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 500 கோடிக்கு விற்பனை ஆகும் எனவும் இந்த படத்தை இந்தியில் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காதலர் தினத்தன்று இந்த படத்தில் இருந்து வெளியான சிங்கள் ட்ராக் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bussines Analysis of vijay in Beast Movie