கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பிரிஞ்சி இலை உதவுகிறது.
நாம் சமைக்கும் மசாலா பொருட்களில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் பிரிஞ்சி இலை. இந்த இலையில் நன்மைகள் அதிகமாக இருக்கிறது. இதனை வெறும் வயிற்றில் காலையில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் இது ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
இதில் இரும்பு கால்சியம் மாங்கனீஸ் போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் கடுமையான நோய்களும் குணமாகும்.
பிரிஞ்சி இலையை கொதிக்க வைத்து குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனையை குறைத்து எடையை பராமரிக்கவும் பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த இலை மிகவும் உதவுகிறது.
பிரிஞ்சி இலைகளை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் நான்கு பிரிஞ்சி இலைகளை போட்டு தண்ணீர் நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அப்படி குடித்து வந்தால் எட்டில் இருந்து பத்து நாட்களிலேயே நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.