bottle radha movie review
கட்டட தொழில் மேஸ்திரியாக வேலைப் பார்த்து வருகிறார் கதாநாயகனான குரு சோமசுந்தரம். இவர் குடிப்பழக்கத்தில் அடிமையானவர். இவர் சஞ்சனா நட்ராஜனை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன. குடிப்பழக்கத்தினால் தொழில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியவில்லை. இவரது மனைவி குரு சோமசுந்தரத்தை குடிப்பழக்கத்தில் மீள மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார். அங்கு நிறைய துன்பங்களை அனுபவிக்கிறார். மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிக்க குரு சோமசுந்தரம் முயற்சி செய்கிறார். அங்கு இருந்து தப்பித்தாரா? குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டாரா? இவரது குடிப்பழக்கத்தினால் குடும்பம் எவ்வளவு அவதியை சந்திக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை. நடிகர்கள் நாயகனான குரு சோமசுந்தரம் குடிப்பழக்கத்தில் அடிமையான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். குடித்துவிட்டு நடிக்கும் காட்சியாக இருக்கட்டும் அதில் இருந்து மீள முயற்சிக்கும் காட்சியாக இருக்கட்டும் பார்வையாளர்களை அவரது நடிப்பால் கட்டிப் போடுகிறார். குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன்,
குடியால் பாதிக்கப்படும் குடும்பத் தலைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனங்களில் ஸ்கோர் செய்துள்ளார். ஜான்விஜய் அவரது வழக்கமான பாணியில் வில்லத்தனம் கலந்த நல்லவனாக நடித்துள்ளார். மறு வாழ்வு மையத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களாக மாறன், பாரி இளவழகன், ஆண்டனி,ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி என அனைவரும் அவர்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். லொள்ளு சபா மாறனின் டைமிங் கவுண்டர்கள் திரையரங்களை சிரிப்பால் அதிரவைத்துள்ளது. இயக்கம் குடிப்பழக்கத்தினால் தான் கெடுவதும் அல்லாமல் அவரை சுற்றி இருக்கும் நபர்களும் அவரது குடும்பமும் எவ்வாறு பாதிப்படைகிறது என்பதை நகைச்சுவை கலந்து மிக எமோஷனலாக கூறியுள்ளார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் .
மறுவாழ்வு மையங்கள் செயல்படும் விதம், அதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் அடுத்த நிலை, என இதுவரை திரையில் பார்த்திராத பல விசயங்களை, எந்தவித நெருடல் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தினகரன் சிவலிங்கம், திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தி பொழுதுபோக்கு படமாகவும் ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் மறுவாழ்வு மையத்தில் இருந்து வெளிவந்த குரு சோமசுந்தரத்தில் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்திருந்தால் திரைப்படம் இன்னும் கூடுதலாக ரசிக்கப்படிருக்கும். இசை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவு ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. தயாரிப்பு நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது.
ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…
நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…
துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்காக ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும்…