தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் தாய்மார்கள் மத்தியில் இந்தப் படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது.
மூன்றே நாளில் வலிமை திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. சென்னையிலும் மூன்று நாளில் வசூல் 5 கோடியை தாண்டியுள்ளது. இப்படியான நிலையில் தற்போது வலிமை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக டிவிட் போட்டுள்ளார்.
போனி கபூர் பதிவு செய்துள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
The family entertainer #Valimai has got everyone hooked with its blockbuster action-packed storyline!????
Book your tickets to the nearest theatre.https://t.co/7ArAWvVyVOhttps://t.co/y4oozTwrtS#ValimaiInCinemas #AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ pic.twitter.com/XDQOKUI54R— Boney Kapoor (@BoneyKapoor) February 27, 2022