எலும்புகள் வலுப்பெற கேழ்வரகு மற்றும் திணை ரொட்டி பயனுள்ளதாக இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் 30 வயதை கடந்தாலே மூட்டு வலி பிரச்சனை வருவது வழக்கமாகிவிட்டது. அதனைக் குறைக்க பல வழிகளை மேற்கொண்டு இருப்பீர்கள். ஆனால் ராகி மற்றும் திணை ரொட்டிகளை பயன்படுத்தி மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
திணை மற்றும் ராகியில் கால்சியம் புரதம் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. மேலும் திணையில் கால்சியம் மிகவும் அதிகமாக இருப்பதால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இது சரி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் குறிப்பாக மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இந்த ரொட்டி செய்து சாப்பிட்டு வரலாம்.