தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
நெல்சன் திரைப்படம் என்பதால் டார்க் காமெடி அதிகமாக இருக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஒரு காமெடி ரோலில் பார்க்கலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. நிறைய காமெடி நடிகர்கள் இருந்தாலும் விடிவி கணேஷ் மட்டுமே ஓரளவிற்கு காமெடி செய்தார் என விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.
இருந்தாலும் இத்திரைப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது. இப்படியான நிலையில் தற்போது பீஸ்ட் படம் முதல் நாள் வசூலில் அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து விட்டது என பிரபல தயாரிப்பாளர் போப்டா தனஞ்ஜெயன் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் வடை எல்லாம் சுடலை இதுதான் நிஜம் தம்பிகளா எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Beast Received Box Office collection numbers of TN. My forecast in interviews came true. Film broke all records for 1st day.
Power of #ThalapathyVijay & his massive reach. Producer will reveal actual nos.#BeastAlltimeRecordOpening
PS: வடையெல்லாம் சுடலை தம்பிகளா. நிஜம்???????? pic.twitter.com/MsgsBlJfnS
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) April 14, 2022

