Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தியன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பகிர்ந்து கொண்ட பாபி சிம்ஹா

bobby simha shared about actor vivek in indian 2 movie update

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பாபி சிம்ஹா. முதலில் துணை வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார்.

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மறைந்த நடிகர் விவேக் இந்தியன் 2 படத்தில் நடித்திருப்பது குறித்து பகிர்ந்து இருக்கும் சுவாரசியமான தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் நூறு சதவீதம் உறுதியாக சொல்கிறேன் மறைந்த நடிகர் விவேக்கின் காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை. இதுவரை நீங்கள் காணாத விவேக்சாரை இப்படத்தில் காண்பீர்கள். என்று அப்பேட்டையில் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.

bobby simha shared about actor vivek in indian 2 movie update
bobby simha shared about actor vivek in indian 2 movie update