கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக வளம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் தயாராகி வருகிறது. அதேபோல் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேராக மோதிக்கொள்ள இருக்கிறது. இதனால் இப்படங்களின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறி வருகிறது.
இந்நிலையில் தளபதி ரசிகர்களை சீண்டிப் பார்க்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் “மீண்டும் பிரியாணி, துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்?” என்ற கேள்வியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டு விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளார். அதாவது, நடிகர் விஜய் அவர்கள் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மீண்டும் இன்று பனையூரில் சந்திக்க உள்ளார் அதனால் அவர்களுக்காக மட்டன் பிரியாணியும் ரெடியாகி வருகிறது. இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வந்ததை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் இது பற்றி பதிவிட்டு தளபதி ரசிகர்களை சீண்டியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
மீண்டும் பிரியாணி.
துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா விஜய்? pic.twitter.com/qFeHGJfuno
— Blue Sattai Maran (@tamiltalkies) December 13, 2022