தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம். இந்த படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார்.
இந்த செயல் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் வயது குறைவாக உள்ளவராக இருந்தாலும் சன்னியாசிகளின் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என ரஜினி விளக்கம் அளித்தார்.
இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காலில் விழுந்த நாளில் இருந்து பட வசூலும் வீழ்ந்தது. தயாரிப்பாளரை காலி செய்ய இவரே போதும் என ரஜினியை விமர்சனம் செய்து பதிவு செய்துள்ளார்.இவருடைய பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலில் விழுந்த நாளில் இருந்து பட வசூலும் வீழ்ந்தது. தயாரிப்பாளரை காலி செய்ய இவரே போதும்.
— Blue Sattai Maran (@tamiltalkies) August 21, 2023