ப்ளூ சட்டை மாறனை திட்டிய அஜித் ரசிகர்கள்.. பாட்டோடு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூலில் நல்ல லாபம் ஈட்டி வருகிறது.

இந்த படத்தை விமர்சனம் செய்தவர்கள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சித்தனர். அதிலும் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்வதற்கு தகுதி இல்லாத திரைப்படம் என இந்த படத்தை கூறியிருந்தார். அப்படி சொல்லிவிட்டு தொடர்ந்து வலிமை படம் பற்றி நக்கலாக ட்வீட் செய்து வந்தார். மேலும் அஜித்தை உருவ கேலி செய்து இருந்தது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் ப்ளூ சட்டை மாறனை வசை பாடி வந்தனர்.

இந்த நிலையில் தன்னை திட்டிய நெட்டிசன்களுக்கு அவர் ரெட் படத்தில் இடம்பெறும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடல் வரிகளை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இந்த பாடலில் அஜித் பெண்களை உருவை கேலி செய்து இருப்பதாகவும் நாம் வணங்கும் சாமியை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அஜித்தை சீண்டும் வகையில் இவர் பதிவிட்டு வரும் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Blue Sattai Maran Reply to Ajith Fans
jothika lakshu

Recent Posts

Kadalaadum Seemayile Video Song

Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…

8 hours ago

Varnajaalam Tamil Lyric Video

Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

8 hours ago

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

2 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

2 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

2 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 days ago