Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சபரி சொன்ன வார்த்தை, பார்வதி கொடுத்த பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

BiggBossTamil9 Day10 Promo2

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் தொடங்க போட்டியாளர்கள் ஓடி முகங்களை எடுத்து வாலில் வைக்கின்றனர் முதலில் கெமி ஒருவரை பிடிக்க யாரையும் தடுக்கக் கூடாது என்ற குரல் கேட்கிறது பிறகு கானா வினோத் மற்றும் பிரவீன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதிய சத்தம் போட்டுக் கொண்டிருக்க இங்கே வந்து நின்னு பேசுங்க என்று சபரி சொல்லுகிறார். உங்களுக்கு என்ன நான் இங்கதான் இருப்பேன் என பார்வதி சொல்லுகிறார். உடனே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.