Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பவித்ராவிடமிருந்து பொம்மையை புடுங்கிய ஜாக்லின், வெளியான முதல் ப்ரோமோ..!

biggbosstamil 8 day 74 promo 1 update

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஏற்கனவே தொடர்ந்து டாஸ்க் நடந்து வரும் நிலையில் எதிரணியினர் பவித்ரா மற்றும் அன்சிதாவிடம் பொம்மையை பறிக்க வர அவர்கள் போராடியும் அவர்கள் கையில் இருப்பதை பிரித்து இருக்கின்றனர். இதனால் அன்சிகா தூக்கிப்போடு பவி அவங்களே கேம் விளையாடட்டும் என்று கத்தி சொல்ல பவித்ரா பொம்மையை தூக்கி எறிந்து விட்டு நீங்க விளையாட விளையாட்டு மட்டும் எல்லாமே கரெக்டா என்று கத்தி பேசுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது