கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 9 சீசன் சமீபத்தில் நடந்தது. டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் இடம் பெற்று இருந்தார்.
20 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். இவர் தற்போது திடீரென கலெக்டர் ஆபீசுக்கு வந்து மனுவை கொடுத்து பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். இவர் நடிப்பின் மீது ஆர்வம் இருப்பது மட்டுமில்லாமல் ஏற்கனவே பிசியோதெரபி டாக்டர் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதற்கு முன்னால் பிசியோதெரபி படித்தவர்களுக்கு டாக்டர் என போட்டுக்கொள்ள கூடாது இதுல வழக்கு நடைபெற்றிருந்ததாகவும் தற்போது பிசியோதெரபி படித்தவர்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என போட்டுக் கொள்ளலாம் என தீர்ப்பு வந்துள்ளதால் கலெக்டர் ஆபீசுக்கு வந்து ஒரு நன்றி கடிதத்தை கொடுத்ததாக கூறியுள்ளார். இது என்னை போன்ற பிசியோதெரபி மருத்துவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


