பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பிறகு எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
எட்டாவது சீசனை போலவே ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 10 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
1. வி.ஜே பார்வதி
2. சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்
3. குக் வித் கோமாளி ஷபானா
4. குக் வித் கோமாளி உமர்
5. அம்ருதா ஸ்ரீனிவாசன்
6. பாக்கியலட்சுமி சீரியல் நேஹா மேனன்
7. நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன்
8. சீரியல் நடிகர் புவி அரசு
9. வினோத் பாபு
10. நடிகர் பாலசரவணன்
இந்தப் பத்து போட்டியாளர்களிடம் ஆடிஷன் நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த 10 பேர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் உங்களுடைய சப்போர்ட் யாருக்காக இருக்கும் என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

biggboss tamil season 9 contestant update