வி.ஜே பார்வதி தான் வெற்றியாளர் என ரீல்சை பகிர்ந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டிக்கெட் வென்று டைரக்டாக அரோரா பைனலுக்குச் சென்றுள்ளார்.
இந்த டிக்கெட் பினாலே டாஸ்க்காக நடந்த கார் போட்டியில் காருக்குள் இருந்த சான்றாவை கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் எட்டி உதைத்து வெளியே தள்ளியதால் அவருக்கு பிக்ஸ் வந்திருந்தது இது மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இவர்களை பார்த்து சான்றா பயந்த நிலையிலே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக விஜய் சேதுபதி கம்ருதீன் மற்றும் பார்வதியை கண்டித்து விட்டு அவர்களுக்கு ரெட்காடை கொடுத்து அனுப்பி விட்டார்.
இது பார்வதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் தொடர்பாக இதுவரை வெளியான 320 ப்ரோமோக்களில் 220 ப்ரோமோக்கள் பார்வதி சம்பந்தமாக இருந்துள்ளதால் அவர்தான் இந்த சீசனை ஆண்ட அரசி என்றும் அவர்தான் உண்மையான வெற்றியாளர் எனவும் குறிப்பிட்டு இருந்த ரீல்சை விஜே பார்வதி பகிர்ந்து உருக்கத்தை வெளியிட்டு உள்ளார்.

biggboss tamil 9 vj parvathy emotional speech

