இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி வெளியில் இரண்டு கார் வந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நிற்கும் அதில் எளிமினேஷன் பட்டியலில் இருக்கும் போட்டியாளர்களான பிரஜன் மற்றும் கெமி இருவரும் ஆளுக்கொரு காரில் ஏற வேண்டும் இந்த இரண்டு கார்களும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் ஆனால் திரும்பி வரும்பொழுது ஒரு கார் மட்டுமே உள்ளே வரும் வராத காரில் இருக்கும் நபர் எலிமினேஷன் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் என்று சொன்னவுடன் இருவரும் காரில் ஏற போட்டியாளர்கள் வருத்தப்படுகின்றனர் மறுபக்கம் சான்றா பிரஜனை நினைத்து கதறி அழுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram

