Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தண்ணீர் பிடிக்க தவறிய போட்டியாளர்கள், பிக் பாஸ் போட்ட வீடியோ.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 4 promo 2 update

கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இன்று வெளியான ப்ரோமோவில் மார்னிங் ஆக்டிவிட்டியில் வாட்டர் மெலன் அகாடமி என ஒரு டாஸ்க் வருகிறது. அப்போது விஜய் பார்வதி ஓடிவந்து வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை நெஞ்சில் எட்டி உதைக்க அவர் கீழே விழுந்து விடுகிறார் பிறகு என்னைக்கு இருந்தாலும் நான்தான் உனக்கு லவ் என சொல்லுகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நீங்க தண்ணியை போய் எவ்வளவு வச்சிருக்கீங்க தெரியுமா என்று கேட்க சபரி 50 லிட்டர் கம்மியா இருக்கு என்று சொல்லுகிறார். நீங்க எப்போ எல்லாம் தண்ணிய மிஸ் பண்ணி இருக்கீங்கன்னு நான் சொல்லவா என்று சொல்லி குறும்படம் போட்டு காட்ட சக போட்டியாளர்கள் அனைவரும் கம்ருதீன் மீது குறை சொல்லிவிட்டு அவர்தான் காரணம் எனவும் சொல்லுகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.