Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துஷார்..கம்ருதீன்.. நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகும் போட்டியாளர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 11 promo 2

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஒவ்வொரு சீசன்லயும் இந்த பிக் பாஸ் வீடு ஒரு பேமஸா இருக்கும் ஆனால் இந்த சீசன்ல என்ன பேமஸா இருக்குன்னு தெரியுமா என்று பிக் பாஸ் அனைவரையும் கேட்டுவிட்டு நோ டிசிப்ளின் என்று சொல்லுகிறார். தூங்குறது, மைக் போடறது இல்ல என சொல்லிவிட்டு துஷாரிடம் நீங்களே பலவாட்டி மைக் போடாம இருக்கீங்க அப்புறம் எப்படி மத்தவங்க போடுவாங்க டிசிப்ளின் இல்லாத வீட்டுக்கு தலைவர் எதற்கு தேவையில்லை வீட்டு தலைவருக்கான பதவி உங்ககிட்ட இருந்து பறிக்கப்படுது என்று சொல்ல துஷாரின் முகம் மாறுகிறது.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவின் கம்ருதீன் துஷார் சபரி மூவரும் விளையாட சபரி இந்த கேமில் இருந்து வெளியேறுகிறார் பிறகு கம்ருதீன் மற்றும் துஷார் இருவரில் யார் ஜெயித்து நாமினேஷன் ஃப்ரீ பெறப் போகிறார் என்பதை பார்க்கலாம்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.