Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஞ்சித் ,ரவீந்தர் மற்றும் ஜாக்லின் மூவரில் வெளியேறப் போவது யார்? வெளியான மூன்றாவது ப்ரோமோ

விஜய் சேதுபதி கையில் எலிமினேஷன் கார்டுடன் வர போட்டியாளர்கள் பயத்தில் உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நேற்று எபிசோடில் விஜய் சேதுபதி அனைவரையும் வெளுத்து வாங்கியுள்ளார்.

இன்று வெளியான ப்ரோமோவின் பிராங்க் வீடியோ குறித்தும் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து முக்கியமாக இந்த வாரம் யார் வெளியேறுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அதற்கான நேரம் வந்துவிட்டது.

ஆம் முதல் எலிமினேஷன் செய்வதற்காக விஜய் சேதுபதி கையில் எலிமினேஷன் கார்டை காட்ட போட்டியாளர்கள் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற குழப்பத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

விஜய் சேதுபதி உங்க மூணு பேர்ல யாராவது ஒருத்தர் வெளியேற போறீங்க என்று ஜாக்லின், ரஞ்சித் மற்றும் ரவீந்தர் பார்த்து சொல்கிறார். யார் வெளியேறப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.