Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராணவ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை, போட்டியாளர்களின் கருத்து, வெளியான முதல் ப்ரோமோ..!

biggboss tamil 8 day 49 promo 1 update

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் விளையாடப்பட்டது. அதில் ராஜாவாக ராணவும் ராணியாக சச்சனாவும் இருந்தனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ராஜாவின் ஆட்சி நடந்ததா ராணியின் ஆட்சி நடந்ததா என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார்.

அதற்கு போட்டியாளர்கள் ராணவ் தனது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்லுகின்றன. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.