Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல் நாளில் நடந்த நாமினேஷன் டாஸ்க்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

biggboss season 9 day 1 promo 1 update

பிக் பாஸ் முதல் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்த நிலையில் நேற்று ஒன்பதாவது சீசன் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஒரு நாள் கூத்து அதாவது இந்த போட்டியில் இவர் ஒரு நாளைக்கு மட்டும் தான் சரக்கு இருக்கு அதுக்கு மேல இவர் தாங்க மாட்டார் அப்படின்னு சொல்ற போட்டியாளரை நாமினேஷன் செய்யுமாறு சொல்லுகின்றனர்.

இதில் வியானா, திவாகர் உட்பட சிலரைப் போட்டியாளர்கள் தேர்வு செய்கின்றனர். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.