தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் தொடங்கியுள்ளது. முதலாளாக தீபக் மனைவி மற்றும் மகன் சத்தம் இல்லாமல் அமைதியாக வருகின்றனர். தீபக் தூங்கிக் கொண்டிருக்க தீபக் மனைவி அவரது பக்கத்தில் படுத்து விடுகிறார். உடனே தீபக் எழுந்து கண்கலங்கி சந்தோஷப்பட்டு உணர்ச்சி பூர்வமான காதலை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram