தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்த நிலையில் விக்ரம் படத்தின் படப்படிப்புகளில் பங்கேற்பதில் இடையூறு ஏற்படுவதன் காரணமாக இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார்.
இதனையடுத்து அவருக்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்த வாரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.

Bigg Boss Ultimate Host Details