தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்ப விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து ஹாட் ஸ்டாரில் இருபத்தி நான்கு மணி நேரமும் லைவ் ஆக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு நாள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு இடையே நாமினேஷன் நடைபெறுகிறது. பலரும் வனிதா, அனிதா, ஜூலி, பாலாஜி முருகதாஸ், சினேகன் உள்ளிட்டோரின் பெயரையே கூறியுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் முதல்நாளே கொடுக்கப்பட்ட டாஸ்கில் தகராறோடு தொடங்கியுள்ளார் வனிதா.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day1 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/YsKa5zWtl2
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 31, 2022