தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலரை தேர்வு செய்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
தொலைக்காட்சிக்கு பதிலாக இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் விஐபி-ல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் வனிதா விஜயகுமார், நிரூப், அனிதா சம்பத், ஜூலி, அபிநய், சுருதி, சினேகன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுவரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி நிரூப் அதிகபடியான ஓட்டுக்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். கடைசி இடத்தில் அபிநய் அவருக்கு முந்தைய இடத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி அதற்கும் முந்தைய இடத்தில் வனிதா விஜயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருவேளை இந்த வாரம் வெளியேற்ற படலம் நடைபெற்றால் அபிநய் வெளியேறுவார் என எதிர்பார்க்கலாம். முதல் வாரத்தில் வெளியேற்றப்படும் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
