Bigg Boss Tamil Promo
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்துநிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.
இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த டாஸ்கில் பல விதமான சண்டைகள் உருவாகி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் அசீமை தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கும் படி விக்ரமன் கூறுகிறார். அதற்கு அசீம் முடியாது என்று மறுக்கிறார். இறுதியில் அசீமிடம் அமுதவாணன், விக்ரமன், தனலட்சுமி மூன்று பேரும்சண்டையிடுகின்றனர்.
அப்போது தனலட்சுமி நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்று அசீமை குற்றம் சாட்டுகிறார். பின்னர் அமுதவாணன், அசீமிடம் உன்னை போன்று என்னால் கத்த முடியாது என்று கூறிவிட்டு செல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. மொத்தத்தில் பொம்மை டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…