'Varisu' Pakka Tamil Movie - Director Vamshi Paidipally
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ‘வாரிசு’ திரைப்படம் குறித்து இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “இது பக்கா தமிழ் படம். ‘தோழா’ படம் பண்ணும்போது இரண்டு மொழிகளில் எடுத்தேன். கொரோனாவுக்கு பிறகு மொழிகளுக்கான தடை என்பது உடைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு மொழியில் எடுக்கப்பட்டு பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது. ஆனால், ‘வாரிசு’ முழுக்க தமிழ் விருந்து. குடும்ப படமாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு வேண்டிய அனைத்தும் இந்த படத்தில் இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…