Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து வெளியான சூப்பர் தகவல், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் விரைவில் எட்டாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்ட நிலையில் இந்த சீசனை தொகுத்து வழங்க போவது யாரு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது. தற்போது கிடைத்த தகவலின்படி இதையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார் என உறுதியாகி உள்ளது.

ப்ரோமோ ஷூட் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஆகஸ்டு மாதத்தில் செட் அமைக்கும் பணிகள் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஆகஸ்ட் 15-ல் கமலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Bigg Boss Tamil 8 latest update viral
Bigg Boss Tamil 8 latest update viral