ஆள் மாறாட்டம் டாஸ்கில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் போல் நடித்துக் காட்டுகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சிசண்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களில் மூன்று போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒன்பது போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருக்கின்றனர் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆள் மாறாட்டம் என்ற தலைப்பில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் கதாபாத்திரத்தை எடுத்து அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களின் ஆக்டிவிட்டி என்னவாக இருக்கிறது அவர்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நடித்துக் காட்ட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஹவுஸ் மேட்ச் ஆக மாறி உள்ளனர்.
முதல் ப்ரோமோவில் கொடுத்த டாஸ்கேல் சக போட்டியாளர்களாக மாறிய போட்டியாளர்கள் அவர்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பேசியும், சண்டை போட்டு செம ஃபன்னாக மாரி விளையாடி வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி பல சுவாரசியங்களை கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.
View this post on Instagram