Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செல்ல பிராணியுடன் கொஞ்சி விளையாடும் ஷிவானி நாராயணன்..

bigg-boss-shivani latest reels-video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற பிரபலமான சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக களம் இறங்கிய இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரீட்சையமானார். தற்பொழுது சினிமாவிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ள ஷிவானி நாராயணன் அவ்வப்பொழுது தனது சமூக வலைதள பக்கத்திலும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் அவர் தனது செல்ல நாய்க்குட்டியுடன் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் மேகம் கருக்காதா என்ற பாடலில் வரும் பறக்க பறக்க துடிக்குதே என்ற வரிக்கு கியூட்டாக கொஞ்சி விளையாடி ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.