தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக நான்காவது சீசன் வெகுவிரைவில் தொடங்க உள்ளது.
இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். முதல் ப்ரோமோ வீடியோ அட்டகாசமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோ அதாவது விளம்பரம் சார்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதிலும் பிக் பாஸ் எப்போது தொடங்கும் என குறிப்பிடவில்லை வெகு விரைவில் ஒளிபரப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த புரோமோவில் தப்புன்னா தட்டிக் கேட்பேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
"தப்புன்னா தட்டி கேட்பேன்..
நல்லதுன்னா தட்டி குடுப்பேன்.. #BiggBossTamil Season 4 | விரைவில்.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #KamalHassan #பிக்பாஸ்" #VijayTelevision pic.twitter.com/XPaxySHx9E— Vijay Television (@vijaytelevision) September 5, 2020