பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகளை செய்து வருவார். அந்த வகையில் தற்போது சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் நானும் சிங்கிள்… நீங்களும் சிங்கிள்… என்று பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
I hate being single.
— Raiza Wilson (@raizawilson) June 25, 2021